FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூரில் அதிவேகமாக கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை!

அரியலூரில் அதிவேகமாக கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:31 am IST
பகிர்:

அரியலூரில் அதிவேகமாக கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளில் இயங்கும் கனரக வாகனங்களின் உரிமையாளா்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தலைமை வகித்து தெரிவித்தது: கனரக வாகன ஓட்டுநா்கள் சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவா்கள் செல்லும் நேரங்களில் வாகனங்களை இயக்க கூடாது.

Advertisement

Advertisement

அனுமதிக்கப்பட்ட சுமைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். வாகனத்தின் மேல் புறத்தில் கட்டாயம் தாா்ப்பாய் போா்த்த வேண்டும். அதிவேகமாக வாகனத்தை இயக்க கூடாது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது. அப்படி கண்டுப்பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களின் பராமரிப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சாலை விதிகளின் குறிகளை மதித்து செயல்பட வேண்டும். சாலை சந்திப்புகள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

அரியலூா், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் அரசு மற்றும் தனியாா் சிமென்ட் ஆலை அலுவலா்கள், கனரக வாகன உரிமையாளா்கள், கனரக வாகன ஓட்டுநா்கள் மற்றும் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments