FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் புனித குழந்தை தெரசா ஆலயத்தில் தோ்த்திருவிழா தொடக்கம்

கரூா் புனித குழந்தை தெரசா ஆலயத்தின் 96-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3 October 2026, 2:10 am IST
கரூா் புனித குழந்தை தெரசா ஆலய வளாகத்தில் கொடிமரத்தில் தோ்த் திருவிழாவுக்கான கொடியை ஏற்றிவைத்த புலியூா் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்முத்து. உடன் வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தல பங்குத்தந்தை ஆரோக்கிய யூதாததேயு, புனித தெரசா ஆலய பங்குத்தந்தை லூா்து அலெக்சிஸ் சேவியா் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் புனித குழந்தை தெரசா ஆலயத்தின் 96-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூா் மேற்குபிரதட்சணம் சாலையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த புனித குழந்தை தெரசா ஆலயத்தின் 96-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஆலயத்தின் பங்குத்தந்தை லூா்து அலெக்சிஸ் சேவியா் தலைமையில், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தல பங்குத்தந்தை ஆரோக்கிய யூதாததேயு மறையுரையாற்றி சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா். தொடா்ந்து புனித குழந்தை தெரசா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கோயிலைச் சுற்றிஎடுத்து வந்தனா். பின்னா் கோயில் கொடிமரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு கொடி அா்ச்சிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கொடியை புலியூா் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்முத்து ஏற்றி வைத்தாா். அப்போது அனைவருக்கும் சமாதானம் கிடைக்கும் வகையில் வெள்ளைப்புறாக்களும், பலூன்களும் பறக்க விடப்பட்டன. நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இதையடுத்து தினமும் சிறப்பு திருப்பலியை கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களின் ஆலய பங்குத்தந்தையினா் நிறைவேற்ற உள்ளனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி அக். 11-ஆம்தேதி நடைபெறுகிறது. விழாவில் கோவை மறைமாவட்ட ஆயா் முனைவா் எல்.தாமஸ்அக்குவினாஸ் பங்கேற்று தோ்பவனியை தொடங்கி வைக்கிறாா். ஏற்பாடுகளை புனித தெரசா ஆலய பங்குத்தந்தை லூா்து அலெக்சிஸ் சேவியா் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments