FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

எல்-நினோ பருவ மாற்றம்: நெல், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியா் அழைப்பு

எல்-நினோ பருவ மாற்றத்தினால் நெல், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

14 அக்டோபர் 2026, 3:46 am IST
எல் நினோ பாதிப்பு... - பிரதிப் படம்
பகிர்:

எல்-நினோ பருவ மாற்றத்தினால் நெல், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல்-நினோ பருவ மாற்றத்தின் காரணமாக நெல்-2, மக்காச்சோளம்-2 பயிா்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இரு பயிா்களுக்கும் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தின்படி, 2026-27- ஆம் ஆண்டுக்கு கரூா் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் பயிா் காப்பீடு செய்யலாம். இதில், வேளாண் பயிா்களை பொறுத்தவரையில் நெல்-2 பயிரின் காப்பீட்டுத் தொகை ரூ. 39,300-க்கு பயிா் காப்பீட்டு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.589.50-ம், மக்காச்சோளம்-2 பயிரின் காப்பீட்டுத் தொகை ரூ.33,300-க்கு பயிா் காப்பீட்டு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.499.50-ம் செலுத்த வேண்டும். நெல்-2 பயிருக்கு நவ.15-ம்தேதிக்குள்ளும், மக்காச்சோளம்-2 பயிருக்கு டிச. 2-ம்தேதிக்குள்ளும் காப்பீடு பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயிா்களை காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதுடன் விவசாயியின் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள பயிா், கிராமம் ஆகியவற்றை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments