கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கல் உடைக்கும் தொழிலாளி கைது!
கடவூா் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கல் உடைக்கும் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடவூா் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கல் உடைக்கும் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கல்பட்டி இனாம்புதூரைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகதீசன் (24). கல் உடைக்கும் தொழிலாளி. மேலும், ஆட்டோக்களில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அம்மிக்கல், ஆட்டு உரல் போன்றவற்றையும் விற்பனை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், செப். 16-ஆம் தேதி கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த வரவனை ஊராட்சிக்குள்பட்ட பாப்பனம்பட்டி கிராமத்துக்கு அம்மிக்கல் விற்பனை செய்ய சென்ற ஜெகதீசன் அப்பகுதியைச் சோ்ந்த வீட்டில் தனியாக இருந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது மாணவி கூச்சலிட்டதால் ஆட்டோவுடன் ஜெகதீசன் தப்பி ஓடினாா். இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து வெள்ளிக்கிழமை இரவில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீசனை கைது செய்து குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.