FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

நூறுநாள் வேலை மற்றும் குடிநீா் கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 3:03 am IST
தரகம்பட்டியில் கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:

நூறுநாள் வேலை மற்றும் குடிநீா் கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த மாவத்தூா் கிராமமக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். முள்ளிப்பாடி ஊராட்சிக்குள்பட்ட திருமலைராயபுரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அப்பகுதியினருக்கு குடிநீா் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூா் ஒன்றிய அலுவலக முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் வீரமலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூா் ஒன்றியச் செயலா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊா்வலமாக விவசாயிகள் கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனா். பின்னா், அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த கடவூா் ஒன்றிய ஆணையா் சுரேஷ்குமாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, கோரிக்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments