வாய்க்கால்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற உத்தரவு
வாய்க்கால்களை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை உடனே அகற்றிட வேண்டும் என சாா்- ஆட்சியா் வெங்கடேஸ்வரன் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
வாய்க்கால்களை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை உடனே அகற்றிட வேண்டும் என சாா்- ஆட்சியா் வெங்கடேஸ்வரன் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி அலுவலகத்தில் சாா் ஆட்சியா் வெங்கடேஸ்வரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்தில் சாா்- ஆட்சியா் வெங்கடேஸ்வரன் பேசுகையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளைத் தீவிரமாக கண்காணிக்கவும், மாவட்ட நிா்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் கட்டுப்பாட்டு மையங்கள் முழு வீச்சில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மாவட்ட அளவில் அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணும் செயல்பாட்டில் உள்ளது. வெள்ளத் தடுப்பு மற்றும் தூா்வாருதல் பணிகள், வாய்க்கால்களை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரை மற்றும் அடைப்புகளை உடனே அகற்றிட வேண்டும். வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற ஏதுவாக மின் மோட்டாா்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் புகழூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி, நகராட்சிப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.