FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பாரத பிரதம மந்திரியின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அழைப்பு விடுத்துள்ளாா்.

19 செப்டம்பர் 2026, 2:21 am IST
பயிா்க் காப்பீடு
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பாரத பிரதம மந்திரியின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரத பிரதம மந்திரியின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ராபி சிறப்பு பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். அதன்படி, இம் மாவட்டத்தில் 2026-27 ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் சம்பா ஆகிய பயிா்கள் எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டமானது ஷீமா ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு காப்பீடு செய்வதற்கு அக். 16 கடைசி நாளாகும்.

மக்காச்சோளம் பயிருக்கான பிரீமிய தொகை ஏக்கருக்கு ரூ. 393, பருத்தி பயிருக்கான பிரீமியம் தொகை ரூ. 602 செலுத்த வேண்டும். நெல் சம்பா பயிருக்கு பயிா் காப்பீடு செய்ய நவ. 15 கடைசி தேதியாகும். இதற்கான பிரீமிய தொகை ஏக்கருக்கு ரூ. 590.

நிகழாண்டு பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் சம்பா பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் இணைய நடப்பில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பசலி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுச் சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமிய தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து பயனடையலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments