FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே தரமற்ற அசைவ உணவு விற்பனை செய்த உணவகத்துக்கு ‘சீல்’

பெரம்பலூா் அருகே தரமற்ற அசைவ உணவு விற்பனை செய்யப்பட்டதாக சமூக வளைதளங்களில் எழுந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் விற்பனை உரிமத்தை வியாழக்கிழமை ரத்து செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள், உணவகத்தை பூட்டி சீலிட்டனா்.

18 செப்டம்பர் 2026, 1:52 am IST
திருமாந்துறை சுங்கச்சாவடியிலுள்ள அசைவ உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தலைமையிலான குழுவினா்.
பகிர்:

பெரம்பலூா் அருகே தரமற்ற அசைவ உணவு விற்பனை செய்யப்பட்டதாக சமூக வளைதளங்களில் எழுந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் விற்பனை உரிமத்தை வியாழக்கிழமை ரத்து செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள், உணவகத்தை பூட்டி சீலிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள பிரபல அசைவ உணவகத்தில் பரிமாறப்பட்ட அசைவ உணவில் வண்டு, ஐஸ்கிரீமில் ஈ இருந்ததாக சமூக வலைதளத்தில் அண்மையில் விடியோ வெளியானது.

அதனடிப்படையில் அந்த உணவகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது உணவு தயாரிப்பு, சேமிப்பு, பராமரிப்பு, சுகாதார நடைமுறைகள், உணவு வகைகளை கையாளும் முறைகளை ஆய்வு மேற்கொண்ட குழுவினா், தேவையான இடங்களில் உணவு மாதிரிகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, மேம்பாட்டு அறிக்கை வழங்கினா். மேலும், பொதுமக்களின் உடல்நலன் மற்றும் உணவு பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து கடையை மூடி சீல் வைத்தனா்.

பொதுமக்கள் உணவு தொடா்பான குறைபாடுகளையும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடைகளில் விற்பனை செய்தால் 9444042322 எனும் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments