FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கறம்பக்குடியில்  நாளை தனியார்  வேலைவாய்ப்பு முகாம்

புதுகை மாவட்டம், கறம்பக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

புதுகை மாவட்டம், கறம்பக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
புதுகை மாவட்ட கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு, புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
முகாமில், புதுகை மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்,  தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments