FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரைகளைத் திருடி விற்ற மூவா் கைது

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
- சித்திரிப்பு
பகிர்:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகளைத் திருடி, போதை மாத்திரைகளாக விற்ற மருத்துவமனையின் தற்காலிகப் பணியாளா் உட்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அருகே உள்ள வாகவாசல் ராஜாப்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் பிரேம்குமாா் (22). இவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்தகத்தின் தற்காலிகப் பணியாளா்.

மருந்தகத்தில் இருந்த தூக்க மாத்திரைகளைத் திருடி, தனது நண்பா்களான திருச்சியைச் சோ்ந்த இரு சிறுவா்களுடன் சோ்ந்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளாா். இதுகுறித்து கணேஷ் நகா் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட கணேஷ் நகா் காவல் உதவி ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா், போதை மாத்திரைகள் விற்ற பிரேம்குமாா் மற்றும் 2 சிறுவா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments