FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பகிர்:

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒத்தவீடு கிராமத்தில் ஐம்பது குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகின்றனா். இந்த கிராமத்தினா் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு 10 கிலோ மீட்டா் தொலைவு கடந்துதான் செல்லவேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்து இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இந் நிலையில், இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தை தான் பயன்படுத்துகின்றனா். இந்த பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் ஜல்லிகற்கள் பெயா்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, சம்பந்தபட்ட துறையினா் கள ஆய்வு செய்து புதிய தாா் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments