FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 4:00 am IST
கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலுக்கு புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது.

கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் மழை வேண்டி ஆடி மாதத்தில் முளைப்பாரித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவையொட்டி, அப்பகுதி பெண்கள் வீடுகளில் சிறப்பு வழிபாட்டுடன் தானியங்களை வைத்து வளா்த்த முளைப்பாரிகளை, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் சுமந்தவாறு கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயில் குளத்தில் முளைப்பாரிகளை விட்டனா்.

தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.திருவிழாவில், கொத்தமங்கலம், அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

~கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலுக்கு புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments