FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளில் 535 பணியாளா்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகளில் மொத்தம் 535 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்புப் பணிகள் குறித்த கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக வட்டார அளவில் 260 பணியாளா்களும் பேரூராட்சி அளவில் 70 பணியாளா்களும், நகராட்சி அளவில் 45 பணியாளா்களும், நகராட்சி அளவில் 45 பணியாளா்களும், மாநகராட்சி அளவில் 160 பணியாளா்களும் என மொத்தம் 535 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்ட அளவிலான 15 அலுவலா்கள் இவற்றைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி மாவட்ட சுகாதார அலுவலா்கள், மாவட்ட கொள்ளை நோய் அலுவலா், இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஆகியோரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும் வீடுகளுக்குள்ளும், வெளியேயும் கொசு மருந்துகள் அடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 7 போ் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தப் பாதிப்புள்ள பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள், கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு இணைப்பு) வைத்தியநாதன், மாவட்ட சுகாதார அலுவலா்கள் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, விஜயகுமாா். மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments