தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,193 வழக்குகளுக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,193 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,193 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் ரூ. 12.06 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் மொத்தம் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான எஸ். ஹொ்மிஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இவ்வளாகத்தில் மொத்தம் 5 அமா்வுகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
மாவட்ட போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி. பன்னீா்செல்வம், கூடுதல் மாவட்ட நீதிபதி என்.எஸ். மீனாசந்திரா, வாகன விபத்து சிறப்பு நீதிபதி ஜி. விஜயகுமாா், தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜூ, செயலா் வெங்கடேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் 11 அமா்வுகள் நடைபெற்றன. மொத்தம் 5,500 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 3,193 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. மொத்தம் ரூ. 12.06 கோடியில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
கீரனூரில்..: கீரனூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1297 வழக்குகள் பட்டியலிடப்பட்டு, 416 வழக்குகளுக்கு ரூ. 2.93 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டு, தீா்வாணைகள் பிறப்பிக்கப்பட்டன. கீரனூா் சாா்பு- நீதிபதி ஏ. தனசேகரன் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்ட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.