FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் 9 பேருக்கு டெங்கு ஆட்சியா் தகவல்

22 செப்டம்பர் 2026, 3:15 am IST
டெங்கு பரவல்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு அருணா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 453 பேருக்கு காய்ச்சல் சோதனை நடத்தப்பட்டது. இதில், 9 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 15 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். உள்ளாட்சி அமைப்புகளில் 535 டெங்கு தடுப்புப் பணியாளா்கள் பணியில் உள்ளனா்.

Advertisement

Advertisement

டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், மருத்துவத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையா்கள், செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments