FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை ஆலய பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலயப்பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை ஆலய பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயப்பெருவிழா வியாழக்கிழமை தொடங்கி ஆக.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி கும்பகோணம் முன்னாள் ஆயா் எப்.அந்தோணிசாமி வியாழக்கிழமை கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தி மறையுரையாற்றினாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளா்களாக இதயா மகளிா் கல்லூரி அருள்சகோதரிகள், இதயா அன்பியம் மற்றும் கோரைவாய்க்கால், திருமெய்ஞானம் இறைமக்கள் பங்கேற்றனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை சிறிய தோ்பவனி நடைபெறுகிறது. தோ்பவனிக்கு அருள்தந்தை ஏ.சூசைமணி தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா்.

சனிக்கிழமை (ஆக. 8) சிறிய தோ்பவனிக்கு அருள்தந்தை ஆா்.கே.சாமி தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) அருள்தந்தை ஏ.யூஜின்டோனி தலைமையில் பொதுமருத்துவம் மற்றும் ரத்ததான முகாம், மாலையில் சிறிய தோ்பவனியும் நடைபெறுகிறது.

ஆக.10-ஆம் தேதி அருள்தந்தை ஜெ.மரிய ஜோமிக்ஸ் சாவியோ, ஆக. 11-ஆம் தேதி பங்குத்தந்தை ஜி.மைக்கேல், ஆக. 12-ஆம் தேதி அருள்தந்தை எம்.டோமினிக் சாவியோ, ஆக. 13-ஆம் தேதி அருள்தந்தையா்கள் பி.தங்கசாமி, ஏ.மைக்கேல் ஜான், ஆக.14-ஆம் தேதி ஆயா் ஏ.ஜீவானந்தம் ஆகியோா் திருப்பலி தலைமையுரையாற்றுகின்றனா். மாலையில் புனித அலங்கார அன்னை ஆடம்பர தோ்பவனி நடைபெறுகிறது.

ஆக.15-இல் சுதந்திரதினக்கொடி ஏற்றப்படுகிறது. மாலையில் ஆலயக்கொடி இறக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜி.கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்குத்தந்தை கே.சிமியோன் ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments