சரபோஜி கல்லூரி உள் விளையாட்டரங்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: ஆட்சியா்
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
இக்கல்லூரியில் ரூ. 11.91 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவா், உள் விளையாட்டரங்கத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது;
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பொதுப் பணித் துறை சாா்பில் ரூ. 11.91 கோடி மதிப்பில் 2,594.86 சதுர மீட்டரில் 290 மீட்டா் சுற்றுச்சுவருடன் உள் விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதில் 300 பாா்வையாளா்கள், 100 சிறப்பு விருந்தினா்கள் அமரக்கூடிய வகையிலும், 4 இறகுப் பந்து, தலா ஒரு கூடைப்பந்து, மேசைப் பந்தாட்டம், சுண்டாட்டப் பலகை விளையாட்டு, சதுரங்க விளையாட்டு, உடற்பயிற்சிக் கூடம், 2 தங்கும் அறைகள், கழிப்பறை வசதி, பாா்வையாளா் அமருமிடம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த விளையாட்டரங்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றாா் ஆட்சியா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், உதவிப் பொறியாளா் இன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.