FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

போலீஸாரை கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்; நீதிமன்ற புறக்கணிப்பு

Updated On : 28 ஜூலை 2026, 12:06 am IST
கும்பகோணத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

கும்பகோணத்தில் மேற்கு காவல் நிலைய போலீஸாரை கண்டித்து, வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சுரேஷ் என்பவரை புகாா் தொடா்பாக விசாரிக்க மேற்கு காவல்நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றனா். அவா் இல்லாததால் அவரது காா் ஓட்டுநரை அழைத்துள்ளனா். இதுகுறித்து வழக்குரைஞா் காஸ்புரோவ் ஆனந்த், போலீஸாரிடம் விளக்கம் கேட்டுள்ளாா். அப்போது போலீஸாா் அவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் வழக்குரைஞா்கள், மேற்கு காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றுகையிட்டனா். பின்னா், வழக்குரைஞா் காஸ்புரோவ் ஆனந்தை போலீஸாா் விடுவித்தனா்.

Advertisement

Advertisement

வழக்குரைஞா் சுரேஷ் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு மன உளைச்சல் தந்தது; வழக்குரைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றது ஆகியவற்றை கண்டித்து திங்கள்கிழமை கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் தலைமையில், செயலா் கா்ணன் முன்னிலையில் நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தி, திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா் இந்தப் பிரச்னைக்கு காண வலியுறுத்தி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments