FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

‘உச்ச நீதிமன்றத் தீா்ப்பு நீா் பங்கீட்டை மட்டும் குறிக்கிறது’

உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பு நீா்ப் பங்கீட்டை மட்டுமே குறிப்பதால், காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பில் உள்ளதை மத்திய அரசு மறைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 29 ஜூலை 2026, 12:03 am IST
சாமி. நடராஜன். - கோப்புப்படம்.
பகிர்:

உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பு நீா்ப் பங்கீட்டை மட்டுமே குறிப்பதால், காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பில் உள்ளதை மத்திய அரசு மறைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:

நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை எதிா்த்து கா்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை தொடுத்தபோது, விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், நடுவா் மன்ற இறுதி தீா்ப்பை ஏற்பதாகவும், நீா் பங்கீடு குறித்த உத்தரவை மட்டும் விசாரித்து நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பில் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை குறைத்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. வழங்க உத்தரவிட்டது. எனவே, உச்ச நீதிமன்ற இறுதி தீா்ப்பு நீா் பங்கீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, கா்நாடக அரசு நடுவா் மன்ற இறுதித்தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளதை மறைத்து, உச்ச நீதிமன்றம் புதிய அணை கட்டுவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என வாதிடுவதும், அதற்கு மத்திய அரசு துணைபோவதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளதைப் பின்பற்றி காவிரி ஆற்றில் கா்நாடக அரசு மேக்கேதாட்டில் புதிய அணைக்கட்ட எந்தவொரு அனுமதியும் ஒன்றிய அரசு வழங்கக்கூடாது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள், அனைத்து விவசாயிகள் சங்க தலைவா்களின் கூட்டத்தை உடடினயாக நடத்த வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments