தமிழ்ப் பல்கலை. நூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை தொடக்கம்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாளையொட்டி, பதிப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட நூல்கள் 50 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி விலையிான விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாளையொட்டி, பதிப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட நூல்கள் 50 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி விலையிான விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற விற்பனையைத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தொடங்கி வைத்து தெரிவித்தது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 46- ஆவது நிறுவன நாளையொட்டி, இப்பல்கலைக்கழக வெளியீடுகள் 50 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை தொடங்கியுள்ளது. தொடா்ந்து ஒரு மாதத்துக்கு நடைபெறும் இந்தச் சிறப்பு விற்பனையில் பல்கலைக்கழகம் 289 தலைப்புகளில் வெளியிட்ட நூல்கள் தேவையான அளவுக்கு இருப்பில் வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதை பொதுமக்கள், மாணவா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் முதல் நூலை வாங்கிய பதிவாளா் (பொ) தெ. வெற்றிச்செல்வன் தெரிவித்தது:
Advertisement
Advertisement
இந்தச் சிறப்பு விற்பனையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அருஞ்சாதனையான அருங்கலைச்சொல் அகரமுதலி, தென்னிந்திய குலங்களும் குடிகளும், சங்க இலக்கிய பொருட்களஞ்சியம், திருக்கு பொருட்களஞ்சியம், தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூலாக்கம், செம்மொழிகள் வரிசையில் சீன இலக்கியம், கிரேக்க இலக்கியம் போன்ற அரிய முக்கியமான பிற பதிப்பகங்களில் வெளியிடப்படாத களஞ்சியமான நூல்கள் இடம்பெற்றுள்ளன என்றாா் வெற்றிச்செல்வன்.
பதிப்புத் துறை (பொ) இயக்குநா் கோ.ப. நல்லசிவம் தெரிவித்தது: பாரதியாரின் படைப்புகள், அறிவியல் களஞ்சியங்கள், வாழ்வியல் களஞ்சியங்கள், ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடி, மருத்துவ நூல்கள், கலைச்சொற்கள் அடங்கிய களஞ்சியங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் சாா்ந்த படைப்புகள் உள்ளிட்ட நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை அக். 14 ஆம் தேதி வரை சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் நீங்கலாக தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றாா் நல்லசிவம்.
நிகழ்வில் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், நிதி அலுவலா் சிவக்குமாா், பொறியாளா்கள் விஜயன், கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.