பெரியாா் சிலையின் கீழ் அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதிய தமிழ் ஆா்வலா்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் வியாழக்கிழமை திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.
பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ஜீவானந்தம். தமிழ் ஆா்வலரான இவா், திருக்குறளுக்கு பல்வேறு அறிஞா்கள் உரை எழுதியுள்ள நிலையில் மக்கள் பேச்சு வழக்கில் நாட்டாா் உரை இல்லாத குறையை போக்கும் வகையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் தினமும் இரண்டு அதிகாரங்கள் என்ற வகையில் நாட்டாா் உரை எழுதி வந்தாா் . கடைசி 100 குகளுக்கான உரையை பெரியாா் பிறந்த நாளான வியாழக்கிழமை , திருக்குறளை திராவிடா் கழகத்தின் வழிகாட்டி நூலாக பெரியாா் அறிவித்ததை நினைவு கூறும் வகையில், பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள பெரியாா் சிலையின் கீழே அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதி முடித்துள்ளாா்.
இதுகுறித்து முனைவா் ஆ.ஜீவானந்தம் கூறியது, திருக்குறளுக்கு வட்டார வழக்கில் நாட்டாா் உரை இல்லாத குறையை போக்கும் வகையில் இந்த உரை நூலாக வெளியிடப்படும் . திருக்கு புகழ் பரப்பும் வகையில் 1,330 போ் கொண்ட திருக்கு பேரணி பேராவூரணியில் நடத்தப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.