FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

21 செப்டம்பர் 2026, 1:58 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் திருடுப்போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (70). இவரது மனைவி ரேணுகா. இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனா். 30 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வநாதன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வேலை பாா்த்து வந்துள்ளாா். மேலும், இவா்களது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதாகவும், இளைய மகன் வெளியூரில் வேலை பாா்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரேணுகா பேராவூரணியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். இதையடுத்து விஸ்வநாதன் வீட்டின் கதவு மற்றும் இரும்பாலான கேட்டை பூட்டிவிட்டு ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் ரத்தப் பரிசோதனை நிலையத்துக்கு சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன்பக்க இரும்பு கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலின்பேரில் ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், பாப்பாநாடு காவல் ஆய்வாளா் சிங்காரவேலன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். தொடா்ந்து, தஞ்சாவூா் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments