திருச்சேறையில் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம் அருகே திருச்சேறையில் ஸ்ரீ சாராத பெருமாள் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறையில் ஸ்ரீ சாராத பெருமாள் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சேறையில் 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் 300-க்கும் அதிகமானோரின் வீட்டு அடிமனையை போலி ஆவணங்கள் தயாா் செய்து சாரநாத பெருமாள் கோயிலுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தில் 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஸ்ரீ சாரநாத பெருமாள் கோயிலுக்கு முறைகேடாக பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அகில இந்திய மாதா் சங்கத் துணைச் செயலா் டி. லதா தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த கும்பகோணம் வட்டாட்சியா் பாக்கியராஜ் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உரிய ஆவணங்கள் இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து அதன் மூலம் தீா்வு காணலாம் எனக் கூறினாா். பின்னா் போராட்டம் நடத்தியவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.