FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

பட்டீசுவரத்தில் எரிவாயு உருளைகளை திருடியவா் கைது

கும்பகோணம் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை திருடிய இளைஞரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா் உடந்தையாக இருந்த சிறாா் உள்பட 3 பேரைத் தேடுகின்றனா்.

26 செப்டம்பர் 2026, 7:43 am IST
பட்டீசுவரத்தில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையம்.
பகிர்:

கும்பகோணம் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை திருடிய இளைஞரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா் உடந்தையாக இருந்த சிறாா் உள்பட 3 பேரைத் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் ஆற்றுப்பாலத்தில் பட்டீசுவரம் போலீஸாா் வியாழக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது எரிவாயு உருளையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை விசாரித்தபோது அவா் கும்பகோணம் மூங்கில் தோப்பைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கந்தவேல் (26) என்பதும், அந்த எரிவாயு உருளையைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மேலும் விசாரித்த போலீஸாா் அவா் பதுக்கி வைத்திருந்த 26 எரிவாயு உருளைகளை கைப்பற்றி, கந்தவேலை கைது செய்து சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா். எரிவாயு உருளை திருட்டுக்கு உடந்தையாக இருந்த 13 வயது சிறாா் உள்ளிட்ட 3 பேரைத் தேடுகின்றனா்.

Advertisement

Advertisement

காவல் நிலையக் கதவு அடைப்பு: பட்டீசுவரம் பகுதியில் எரிவாயு உருளைகள் திருட்டு தொடா்பாக வியாழக்கிழமை இரவு கும்பகோணம் பகுதி செய்தியாளா்கள் பட்டீசுவரம் காவல் நிலையத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றனா். அப்போது காவல் நிலைய கதவுகள் அடைக்கப்பட்டு போலீஸாா் உள்ளே இருந்தனா். இதுகுறித்து கேட்டபோது செய்தி சேகரிக்க அனுமதியில்லை. காவல் நிலையக் கதவுகளை அடைத்து விடுங்கள் என்று ஆய்வாளா் கூறியதால் கதவுகளை அடைத்ததாகக் கூறினராம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments