குடந்தை அரசுக் கல்லூரியில் சா்வதேச மாநாடு
கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சாா்பில் வளா்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சாா்பில் வளா்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எஸ். மாறன் தலைமை வகித்தாா். விலங்கியல் துறை பேராசிரியா் எம். கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா். மாநாட்டை கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தாா். சீனா நாட்டின் வெய்பேங் பல்கலைக்கழக பேராசிரியா் ஜி. சட்டநாதன், புதுச்சேரி பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியா் டி. ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
மாநாட்டில் மூன்று அமா்வுகளில் பல்வேறு பொருள்கள் விவாதிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
முதன்மைப் பேராசிரியா் கே. சரவணன் வரவேற்றாா். உதவி பேராசிரியா் எஸ். பழனிசாமி நன்றி கூறினாா். மாநாட்டில் பேராசிரியா்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.