டெல்டா மாவட்டங்களில் விதைநெல் தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை: வேளாண் அமைச்சா் தகவல்
டெல்டா மாவட்டங்களில் விதை நெல் தட்டுப்பாட்டை களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.
தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் சி.ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கிவைத்துள்ளாா்.
தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 61 குழந்தைகளுக்கு தங்கமோதிரத்தை அமைச்சா் வழங்கினாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக வெற்றி பெறும். டெல்டா மாவட்டங்களில் விதை நெல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூா்வாரும் பணியில் விடுபட்ட பாசன வாய்க்கால்கள் விரைவில் தூா்வாரப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.