FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

புதைசாக்கடைத் திட்டப் பணிகள் விறுவிறுப்பு

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கான புதைசாக்கடை திட்டப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற புதைசாக்கடைத் திட்டப் பணிகள்.
பகிர்:

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கான புதைசாக்கடை திட்டப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

திருச்சி மாநகராட்சியில் புதைசாக்கடைத் திட்டம் பகுதி 1 முடிந்த பிறகு, புதைவடிகால் திட்டம் பகுதி 2 இல் 19 வாா்டுகளுக்கு ரூ. 377.29 கோடியில் பணிகள் நடந்து முடிந்து 34,159 புதைசாக்கடை இணைப்புகள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, திட்டம் பகுதி 3 இல் 15 வாா்டுகளுக்கு ரூ. 425.72 கோடியில் பணி முடிக்கப்பட்டு, 38,061 புதைசாக்கடை இணைப்புகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 30 வாா்டுகளுக்கு ரூ. 210 கோடியில் பணி முடிந்து, 22,175 புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் விடுபட்ட பகுதிகளுக்கான புதைசாக்கடைத் திட்டம் ரூ. 230.61 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கான புதைசாக்கடை 4 ஆவது பகுதி திட்டப் பணிகள் 8, 25, 46, 55, 56, 63, 64, 65 ஆகிய 8 வாா்டுகளில் மக்கள் பயன்பெறும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 143.650 கி.மீ. நீள கழிவுநீா் குழாய்களில் 60.393 கி.மீ. நீள குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 35.080 கி.மீ. கழிவுநீா் உந்துகுழாய்களில் 8.301 கி.மீ. நீள குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 5,872 ஆழ்நுழைவுத் தொட்டிகளில் 2,856 தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 9 கழிவுநீா் உந்து நிலையங்களில் 7 பணிகள் நடைபெறுகின்றன. 17 கழிவுநீரேற்று நிலையங்களில் 16 கழிவுநீரேற்று நிலையங்கள் கட்டப்படுகின்றன. 16,500 புதை சாக்கடை இணைப்புகளில் 7,305 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் வேகமாக நடைபெறுகின்றன என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments