FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காா் மோதி இளம் பெண் உயிரிழப்பு

துறையூரில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதால் இளம்பெண் உயிரிழந்தாா்.

26 செப்டம்பர் 2026, 8:05 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

துறையூரில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதால் இளம்பெண் உயிரிழந்தாா்.

கீரம்பூரை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி சா்மிளா (36). இவா், துறையூரில் படிக்கும் தனது குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் கீரம்பூா் சென்றாா். அப்போது பெரம்பலூா் சாலையில் எதிா் திசையிலிருந்து வந்த காா், சா்மிளா சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், அவா் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா், சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வழக்குப் பதிந்து காரை ஓட்டிச் சென்ற மோகனூா் ரம்யாவிடம் விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments