FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கருப்பசாமி கோயிலில் அருவாள் பிரதிஷ்டை

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருவாள்.

15 செப்டம்பர் 2026, 3:20 am IST
கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருவாள்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள சக்திமிகு ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் வளாகத்தில் கருப்பசாமிக்கு 11 அடி உயர அருவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி கோயிலில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,

மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 11 அடி உயர அருவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஸ்ரீலஸ்ரீமுருகன் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments