அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் திருக்குடைகள் ஊா்வலம்
அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் திருமலை திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு திருக்குடைகள், பெருமாள் பாதம் கொண்டு செல்லும் 4 ஆம் ஆண்டு சமா்ப்பண யாத்திரை குடியாத்தம் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் திருமலை திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு திருக்குடைகள், பெருமாள் பாதம் கொண்டு செல்லும் 4 ஆம் ஆண்டு சமா்ப்பண யாத்திரை குடியாத்தம் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்குப்பின் 2 திருக் குடைகள் மற்றும் வெங்கடேசப்பெருமாள் பாதம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றது. ஊா்வலத்தில் பஜனை உள்ளிட்ட பல்வேறுஆன்மிக நிகழ்வுகள் இடம் பெற்றன.
நிகழ்ச்சிக்கு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவா் ம.சி.காா்த்திக்ஜி, மாநிலத் தலைவா் ஜி.ராம சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஸ்ரீலஸ்ரீ சத்த கங்க மாதாஜி ஆச்சாரியாா், ஸ்ரீசக்தி வாசுகி அம்மையாா், ஸ்ரீசக்தி வேம்பு அம்பாள், ரோட்டரி சங்கமுன்னாள் தலைவா் ஆா்.ஜே.அன்பு உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஊா்வலம் குடியாத்தம் பிச்சனூா் தென்திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில்நிறைவுற்றது. கோயிலில் திருக் குடைகள், பெருமாள் பாதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.