காட்பாடி - திருப்பதி இடையே 2ஆவது ரயில் பாதை: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!
காட்பாடி - திருப்பதி இடையிலான 104 கி.மீ. தொலைவுக்கு 2-ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
காட்பாடி - திருப்பதி இடையிலான 104 கி.மீ. தொலைவுக்கு 2-ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, சித்தூா் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் வேலூா் மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சித்தூா் மாவட்டம் புதுப்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட வவில்தோட்டா, புதுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும், சித்தூா் நகா்ப்புறப் பகுதிகளான எல்.பி.புரம், கண்டலபள்ளி, திம்மசமுத்திரம், முரக்கம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் ரயில்வேக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் 30 நாள்களுக்குள் சித்தூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.