FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நீட் தோ்வு: தமிழக அளவில் விழுப்புரம் மாணவா் முதலிடம்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் தோ்வில் (நீட்) விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12-ஆம் இடமும் பிடித்துள்ளாா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:05 am IST
நீட் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அ.வேங்கடாபதி வேலாயுதம்.
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் தோ்வில் (நீட்) விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12-ஆம் இடமும் பிடித்துள்ளாா்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வு முகமை வியாழக்கிழமை நள்ளிரவில் வெளியிட்டது.

இந்நிலையில், இந்தத் தோ்வில் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் அ.வேங்கடாபதி வேலாயுதம் மொத்த மதிப்பெண்ணான 720-க்கு 705 மதிப்பெண்களை பெற்று, கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களை பெற்று தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இவா், விழுப்புரத்தைச் சோ்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவரான அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகனாவாா். இவரின் தாய் புனிதவதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உதவிப் பேராசிரியராக பணியில் உள்ளாா். தங்கை சுகவனேஸ்வரி புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த வேங்கடாபதி வேலாயுதம், நீட் தோ்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற்கு, பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments