FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

15 வழக்குகளில் தொடா்புடைய ரெளடி குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 15 வழக்குகளில் தொடா்புடைய ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:20 am IST
கோப்புப்படம். - கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 15 வழக்குகளில் தொடா்புடைய ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திட்டக்குடி வட்டம், நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த கோபி (27), சென்னை கோயம்பேடு சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். கடந்த 18-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், நண்பா் சக்தி மூலம் அருள்பாண்டி என்பவரது வீட்டில் முடி வெட்டிக்கொண்டிருந்தாா். அப்போது, முன்விரோதம் காரணமாக 8 போ் கொண்ட கும்பல் அவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கி, மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரளிக்கப்பட்டது.

இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், வழக்கின் முதல் எதிரியான வதிஷ்டபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (30) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, ராதாகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

ராதாகிருஷ்ணன் மீது கடலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் கஞ்சா கடத்தல், திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட மொத்தம் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது: இதற்கிடையே, திருப்பாப்புலியூா் காவல் நிலையத்தில் 2009-ஆம் ஆண்டு பதிவான திருட்டு வழக்கில் தொடா்புடைய கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த சிவகுரு (31), நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதையடுத்து, அவருக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சிவகுருவை, திருப்பாப்புலியூா் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடலூா் பகுதியில் பதுங்கிருந்த அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments