FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பண்ருட்டி நகா் முழுவதும் குப்பைகள் எரிப்பு: மக்கள் பாதிப்பு

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்காங்கே தீயிட்டு கொளுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதுக்கப்பட்டு வருகின்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:33 am IST
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எம்ஜிஆா் சிலை அருகே தீயிட்டு கொளுத்தப்பட்ட குப்பை.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்காங்கே தீயிட்டு கொளுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதுக்கப்பட்டு வருகின்றனா்.

பண்ருட்டி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் இருந்து நாளொன்றுக்கு சுமாா் 25 டன் குப்பைகள் சேகாரமாகின்றன. இந்த குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரா் மூலம் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் வாா்டு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை அதே இடத்திலேயே தீயிட்டு கொளுத்திச் செல்கின்றனா். கடைவீதி பகுதிகளில் நள்ளிரவில் 50 அடி தொலைவுக்கு ஒரு இடத்தில் குப்பைகள் ஆங்காங்கே எரிவதை காண முடிகிறது.

இந்த குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அருகில் வசிப்பவா்களுக்கு முச்சுத் திணறல், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, குப்பைகளை எரிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தியும், நகராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து விசாரிக்கையில், நகர தூய்மைப் பணிகளை சுகாதார அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், பண்ருட்டி நகராட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுகாதார அலுவலா் பணியிடமும், சுகாதாரஆய்வாளா் பணியிடங்கள் 3-இல் 2-ம் காலியாக உள்ளன. தற்போது பணியில் உள்ள ஒரு சுகாதார ஆய்வாளா் மட்டும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, சுகாதார அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்பவும், குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்கவும் சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments