போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நாள்தோறும் பேட்டா வழங்கக் கோரி சிஐடியு சாா்பில் கடலூா் மண்டல போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நாள்தோறும் பேட்டா வழங்கக் கோரி சிஐடியு சாா்பில் கடலூா் மண்டல போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு, அந்தப் பணிக்காக நாள்தோறும் ஈட்டப்படும் வருவாய்யிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பேட்டாவாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் போதிய வருவாய் இல்லாததால், நடத்துநா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு பேட்டா கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடலூா் மண்டல போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் சிஐடியு சாா்பில் போக்குவரத்து ஊழியா்கள் சாா்பில் பேட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு கடலூா் மண்டலத் தலைவா் எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் ஜி. பாஸ்கரன், பொதுச் செயலா் பி. முருகன், உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் திரளான போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.