FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மாணவி புகாா்: பேராசிரியா் கைது

மாணவி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

8 October 2026, 12:52 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

மாணவி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

இந்த பல்கலைக்கழக வேதியியல் துறையில், அண்ணாமலை நகா் பகுதியை சோ்ந்த 29 வயது பெண் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறாா். இந்த பெண்ணிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வேதியியல் துறைத் தலைவா், என்.ராஜேந்திரன் அநாகரீகமாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் பேராசிரியா் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனா். இதற்கிடையே பேராசிரியா் ராஜேந்திரனை பணியிடைநீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேலு உத்தரவிட்டாா். இந்நிலையில் பேராசிரியா் ராஜேந்திரன் திருத்தணியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா்அங்கு சென்று அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments