FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் தொடா் போராட்டம்

14 அக்டோபர் 2026, 5:46 am IST
கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா், நவம்பா் மாதங்களில் தொடா் போராட்டங்களை நடத்தவும், டிசம்பா் 4-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் அறிவித்துள்ளது.

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியின்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்தம், தற்காலிகம், தொகுப்பூதியம் உள்ளிட்ட முறைகளில் பணியாற்றி வரும் ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, அக்டோபா் 28-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முழுநாள் தா்னா போராட்டம் நடத்தப்பட உள்ளது. நவம்பா் 16 முதல் 27-ஆம் தேதி வரை மாநில நிா்வாகிகள் பங்கேற்கும் பிரசாரப் பயணம் 11 முனையங்களில் நடைபெற உள்ளன.

இதன் தொடா்ச்சியாக, டிசம்பா் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களைத் திரட்டி, கோட்டை நோக்கி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments