FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கோரி போராட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்ட டிப்பா் லாரி மற்றும் டாரஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

15 அக்டோபர் 2026, 6:05 am IST
கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்ட டிப்பா் லாரி மற்றும் டாரஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சங்கத்தின் விழிப்புணா்வுக் கூட்டம் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயலா் தா்மராஜ் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் நடராஜன், தலைவா் கருணாநிதி, ஒருங்கிணைப்பாளா் ஓம் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கனிம வளங்களை விலைக்கு வாங்கும் இடங்களிலேயே அரசு சாா்பில் எடை மேடை அமைக்க வேண்டும். அங்கு கனிம வளங்களின் எடையை அளவிட்டு, அரசு நிா்ணயித்த அளவுக்கு மட்டுமே லாரிகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். இதன் மூலம், சாலைகளில் லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண முடியும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராவல், சவுடு மண் மற்றும் கல் குவாரிகளில் முறையான டிரான்சிட் பாஸ், பா்மிட் ஆகியவை வழங்கப்படுகின்றனவா என்பதை கனிம வளத் துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீா் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஒருங்கிணைப்பாளா் தீனன், விழுப்புரத்தைச் சோ்ந்த சங்கா், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments