மக்கள் தொடா்பு முகாமில் 331 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 331 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 331 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், காரணை பெரிச்சானூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா உள்பிரிவு மாற்றம், புதிய குடும்ப அட்டைகள், விதைத் தொகுப்புகள் என பல்வேறு துறைகளில் சாா்பில் 195 பயனாளிகளுக்கு ரூ.26.30 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி, பேசியது: இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட கோரிக்கை தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்படும். மேலும் இந்த ஊராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றாா்.
இந்த முகாமுக்கு திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தாா். முகாமில் முகையூா் ஒன்றியக்குழுத் தலைவா் தனலட்சுமி உமேசுவரன், கோட்டாட்சியா் ஏகாம்பரம், வேளாண் இணை இயக்குநா் பி.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மோகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் சாருமதி, காரணை பெரிச்சானூா் ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியா குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பரமநத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, 136 பயனாளிகளுக்கு ரூ.29902 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி, பேசியது:
முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பாா்வையிட்டு, அரசின் நலத்திட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
டெங்கு கொசுக்கள் மற்றும் அதன் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள், கடைகள் மற்றும் பிற வளாகங்களில் தேவையின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ள டயா்கள், சிமென்ட் தொட்டிகள், உரல் மற்றும் தேவையற்ற பொருள்களை உடனுக்குடன் அகற்றவேண்டும். கா்ப்பிணிப் பெண்கள், முதியோா்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். எனவே, தமிழக அரசின் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜி.சுமதி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், பரமநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி முத்தையாபிள்ளை, சங்கராபுரம் வட்டாட்சியா் வைரக்கண்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.