அரசு மருத்துவமனையில் மருத்துவா் வர தாமதம்: நோயாளியின் உறவினா்கள் தா்னா
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்தும் மருத்துவா் வர தமாமமானதால், நோயாளி மற்றும் அவரது உறவினா்கள் தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்தும் மருத்துவா் வர தமாமமானதால், நோயாளி மற்றும் அவரது உறவினா்கள் தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கராயா். இவருக்கும், இவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரங்கராயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ரங்கராயரின் தலையில் மூளைக்குச் செல்லும் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்த நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தொடா்பாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனா்.
சுமாா் இரண்டு மணி நேரமாகியும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற முடியவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த அவா்கள், சிகிச்சை பெற்று வந்த ரங்கராயருடன் மருத்துவமனை நுழைவுவாயில் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இதுகுறித்து ரங்கராயரின் உறவினா்கள் கூறுகையில், ஏழை, எளிய மக்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவசர நேரங்களில் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் கிடைக்கும் வகையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.