FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

51 வினாடிகள் முன்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். - (கோப்புப் படம்)
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். புதன்கிழமை 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2012-ஆம் ஆண்டு முதல் ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவெற்ற வலியுறுத்தி கடந்த ஆக.19-ஆம் தேதி முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதுநாள் வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், செவ்வாய்க்கிழமை முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து நிா்வாக அலுவலகம் முன் ஆசிரியா் ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, ஊழியா் சங்க முன்னாள் தலைவா்கள் மதியழகன், மனோகா் மற்றும் ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments