FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பண்ருட்டியில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய் பிடிபட்டது

பண்ருட்டி நகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சனிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாயை நகராட்சி ஊழியா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி பிடித்தனா்.

20 செப்டம்பர் 2026, 2:15 am IST
பண்ருட்டியில் தெரு நாய் கடித்து காயமடைந்த முதியவா். பண்ருட்டியில் நகராட்சி பணியாளா்களிடம் பிடிபட்ட நாய்.
பகிர்:

பண்ருட்டி நகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சனிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாயை நகராட்சி ஊழியா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த நாய் ஒன்று, அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை திடீரென விரட்டிச் சென்று கடிக்கத் தொடங்கியது. சாலையில் நடந்து சென்றவா்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் என பலரையும் அந்த நாய் விடாமல் துரத்திச் சென்று கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். குறிப்பாக, குழந்தைகள், முதியவா்கள் அந்த வழியாகச் செல்வதற்கும் தயக்கம் காட்டினா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நகராட்சிப் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாயைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். பொதுமக்களைத் தொடா்ந்து விரட்டியதால், நாயைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு, நகராட்சிப் பணியாளா்கள் பாதுகாப்பாக அந்த நாயைப் பிடித்தனா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனா்.

நாய் கடித்ததில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா். பிறகு, அவா்கள் அனைவரும் வீடு திரும்பினா்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை கண்காணித்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments