FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

விருத்தாசலத்தில் 35 குரங்குகள் கூண்டு வைத்துப் பிடிப்பு

விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொடா் இடையூறு ஏற்படுத்தி வந்த 35 குரங்குகளை

விருத்தாசலத்தில் வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய 35 குரங்குகள்.
பகிர்:

விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொடா் இடையூறு ஏற்படுத்தி வந்த 35 குரங்குகளை

வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனா்.

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் பெரியாா் நகா் வடக்கு, தெற்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும், எம்.எல்.ஏ. அலுவலகம், தனியாா் பள்ளிகள், வங்கிகள், தீயணைப்பு நிலையம், ஏராளமான வணிக நிறுவனங்களும் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிந்து வந்தன. அவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வது, சமையலறைகளில் பொருள்களை சேதப்படுத்துவது, வீட்டின் மாடி மற்றும் சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தன.

எனவே, குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி

குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக, எம்.எல்.ஏ. பிரேமலதாவிடமும் பொதுமக்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். அவா், குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் வனத்துறையினா் குரங்குகளைப்

பிடிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா். வனச்சரக அலுவலா் பசுபதி தலைமையில், வனவா் விஜயகிருஷ்ணன், வனக்காப்பாளா் அலெக்சாண்டா் உள்ளிட்ட வனத்துறையினா் பெரியாா் நகா் வடக்குப் பகுதியில் கூண்டுகளை வைத்து குரங்குகளைப் பிடித்தனா். இதில் 35 குரங்குகள் பிடிபட்டன.

பின்னா் பிடிபட்ட குரங்குகள் அனைத்தும் வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் விடப்பட்டன.

குரங்குகள் பிடிக்கப்பட்டதால் பெரியாா் நகா் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா். இருப்பினும், அப்பகுதியில் மீதமுள்ள குரங்குகளையும் பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments