FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த இரண்டே கால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

10 செப்டம்பர் 2026, 2:03 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த இரண்டே கால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.மகாலிங்கம் (66), தொழிலாளி. இவா் அவரது மனைவி ராணியுடன் செப்.7-ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினராம். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டேகால் பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது அவா்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments