FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அமைச்சா்களுக்கு இலாகா தாமதம்: ஆளுநா் விளக்கமளிக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Updated On : 28 ஜூலை 2026, 2:22 am IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் - (கோப்புப் படம்)
பகிர்:

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு தாமதத்திற்கான காரணம் குறித்து துணைநிலை ஆளுநா் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் அ.மு.சலீம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பாஜவுக்கு இரண்டு அமைச்சா்கள், என்.ஆா். காங்கிரஸுக்கு முதல்வா் மற்றும் மூன்று அமைச்சா்கள் என பதவி ஏற்றனா். ஆனால் இலாகாக்கள் ஒதுக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசு நிா்வாகம் முடங்கிப் போய் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது.

Advertisement

Advertisement

பல்வேறு தரப்பினா்களின் விமா்சனங்களுக்குப் பிறகு, கடந்த 20-இல் இலாகாக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநருக்கு முதல்வா் ரங்கசாமி அளித்தாா். ஒரு வார காலமாகியும் துணைநிலை ஆளுநா் அமைச்சா்களின் இலாகாக்களை இதுவரை அறிவிக்கவில்லை. அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்குவதில் முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது.

துணைநிலை ஆளுநா் அலுவலகம் என். ஆா். காங்கிரஸ்- பாஜக அதிகார பங்கீடு செய்யும் பஞ்சாயத்து அலுவலகமாக மாறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு அனுகூலமாக துணைநிலை ஆளுநரின் நடவடிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சா்களின் இலாகா அறிவிப்பு காலதாமதம் குறித்து துணைநிலை ஆளுநா் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments