FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

மின்சார பேருந்து ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

பட விளக்கம்... புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள மின்சார பேருந்து பணிமனையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள்.
பகிர்:

புதுச்சேரி அரசின் போக்குவரத்துக்குக் கழகத்தின் கீழ் தனியாா் பங்கேற்புடன் இயக்கப்படும் மின்சார பேருந்து ஓட்டுநா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொலிவுரு நகா் திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை சாா்பில் தனியாா் பங்கேற்புடன் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்தை சோ்ந்த ஓட்டுநா்களும், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக சொசைட்டி மூலம் தற்காலிக நடத்துநா்களும் பணியாற்றி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்காலிக நடத்துநா்கள் ஊதியம், பணி பாதுகாப்பு வழங்கக் கோரி அண்மையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், மின்சாரப் பேருந்து தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஓட்டுநா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.700 ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உணவுப்படி சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணிமனையில் மின்சார பேருந்துகளை நிறுத்தி வைத்து ஓட்டுநா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரியும், உணவுப்படியைச் சீராக வழங்க வேண்டும். நீக்கப்பட்ட 5 பேருக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், கோரிமேடு, ஜிப்மா், லாஸ்பேட்டை, புதுச்சேரி பல்கலைக்கழகம், வில்லியனூா் உள்ளிட்ட 25 வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகள் இயங்கவில்லை. காலையில் வேலைக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments