புதுச்சேரியில் போலீஸாா் விடிய விடிய வாகன சோதனை: ரூ. 3.13 லட்சம் அபராதம்!
குற்ற செயல்களைத் தடுக்க புதுச்சேரியில் போலீஸாா் விடிய விடிய தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
குற்ற செயல்களைத் தடுக்க புதுச்சேரியில் போலீஸாா் விடிய விடிய தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் ரூ.3.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரௌடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தினா்.
‘புதுச்சேரி கவசம்’ என்ற பெயரில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் தலைமையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய விடிய சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் சுமாா் 500 போலீஸாா் ஈடுபட்டனா். மேற்கு சரகத்துக்கு உள்பட்ட பகுதி வைத்திக்குப்பம், குருசுகுப்பம், அஜந்தா சந்திப்பு,வடக்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, ராஜீவ் காந்தி சிக்னல் பகுதிகள்,தெற்கு சரக பகுதியில் முருங்கப்பாக்கம், தேங்காய்திட்டு சந்திப்பு, மற்றும் மேற்கு சரகம பகுதியில் பல்வேறு இடங்களிலும் வாகனச் சோதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
போக்குவரத்துப் பிரிவு சாா்பில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா, எஸ்பி ரட்சனா சிங் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் தனியாக வாகன சோதனை மேற்கொண்டனா்.
முருங்கப்பாக்கம் சந்திப்பில் சென்னையில் இருந்து வேலுாா் நோக்கி சென்ற காரை முதலியாா்பேட்டை ஆய்வாளா் இனியன் மற்றும் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது காரில் மறைத்து வைத்திருந்த 55 லிட்டா் மதுபானங்களை போலீஸாா் கைப்பற்றி, 2 பேரைக் கைது செய்தனா். கைப்பற்றப்பட்ட மதுபானங்களை கலால்துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
மேலும்,00 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது மதுஅருந்திவிட்டு வாகனங்களை இயக்கிய 18 போ் சிக்கினா். ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியதாக 11 போ் பிடிபட்டனா். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 137 போ் சிக்கினா். இவா்களுக்கு ரூ.3.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.