FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

13 அக்டோபர் 2026, 1:08 am IST
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், சிலருக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் ஆணைக்கு இணங்க, இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, பயிற்சி மற்றும் நலம் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராஜேந்தா் குமாா் குப்தா தலைமையிடத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

புதுச்சேரி காவல் துறையில் பணி ஒப்புக் கொண்ட தீபிகா, புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படையின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகவும், சிக்கந்தா் சிங் பயிற்சி மற்றும் நலம் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இரண்டாம் நிலை அடிப்படை பயிற்சியை முடித்து புதுச்சேரி காவல் துறையில் பணி ஒப்புக் கொண்ட அனுராக் சோப்ரா, இணைய வழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments