விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: புதுச்சேரி முதல்வருக்கு பேரவைத் தற்காலிகத் தலைவா் மனு
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் மனு அளித்துள்ளாா்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் மனு அளித்துள்ளாா்.
அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் கடந்த 4 மாதத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு, அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. விலைவாசி உயா்வின் காரணமாக மக்கள் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
ரூ.1100க்கு விற்கப்பட்ட அரிசி மூட்டை ரூ.1800-க்கும், ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட பொன்னி அரிசி ரூ.80-க்கும், ரூ.900-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி மூட்டை ரூ 1200-க்கும் விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு ரூ.120-ல் இருந்து ரூ.160-க்கு விற்கப்படுகிறது. சமையல் எண்ணைய் ரூ.130-ல் இருந்து ரூ.160 ஆக விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலையும் 2 மடங்காக உயா்ந்துள்ளது.
ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த அதிகாரிகள், மொத்த வியாபாரிகளை அழைத்து பேசி, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.