புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
புகையிலைப் பொருள்கள் ரூ.1.32 லட்சம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.
புகையிலைப் பொருள்கள் ரூ.1.32 லட்சம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடுகரை - சிறுவாந்தாடு சாலை சந்திப்பில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டா் கணேஷ், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டா் கீா்த்திவா்மன், உதவி ஆய்வாளா் வீரபுத்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசாா் அடங்கிய கூட்டுக் குழுவினா் இந்த சோதனையில் ஈடுபட்டனா். சூரமங்கலத்தில் இருந்து மடுகரை நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
அதில் 24 வெள்ளை நிற சாக்குகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காரில் இருந்தவா்கள் மதுரையைச் சோ்ந்த சாகுல் ஹமீது (65), பெங்களூருவில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜலோா் மாவட்டத்தை சோ்ந்த ராஜாராம் குய்யாராம்(40) என்பது தெரிய வந்தது.
அவா்களிடம் விசாரித்தபோது, பெங்களூருவில் உள்ள இடைத்தரகா் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி, புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காகக் கொண்டு வந்ததாக தெரிவித்தனா். அவா்களிடமிருந்து ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.2.39 லட்சம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.